•  சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தவமிருந்த கோமதி அம்மனுக்கு சுவாமி சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் உள் பிரகார யாகசாலை மண்டபத்தில் கோமதி அம்மன், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

aadi thapasu

  • தொடர்ந்து கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருந்தார்.
  • மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
  • பின்னர் மீண்டும் அம்பாள் தபசு மண்டபத்தை அடைந்தார்.
  • இரவு 12 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
  • எம்பி சசிகலா புஷ்பா தாயின் முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு சசிகலா புஷ்பா எம்பியின் தாய் கவுரி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஐகோர்ட் கிளையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  •  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.2 முதல் வேலைநிறுத்தம் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வைர விழா, 25வது அகில இந்திய மாநாடு சென்னை புரசைவாகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவர் குட்டி தலைமை தாங்கினார். தேசிய தலைவர் பத்மநாதன் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராகவைய்யா பேசியதாவது:
  • தொழிலாளர்கள் நலன் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும், புதிய ஊதிய நிர்ணய கணக்கீடு மற்றும் அலவென்ஸ் நிர்ணய குழு அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூலை 6ம் ஒத்தி வைக்கப்பட்ட நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்தை மீண்டும் செப்டம்பர் 2ம் தேதி முதல் நடத்துவது குறித்து அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

விவசாய

  • கடன் தள்ளுபடி திட்டத்தை தொடர்ந்து விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்க ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக தேர்தலின் போது 31.03.2016 வரை சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த மே மாதம் 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5,780 கோடி செலவாகும் எனவும், அதன் மூலம் 16,94,145 விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடிக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இத்திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகளுக்கு புதிய கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுத்து வந்தது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க தற்போது ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்க பதிவாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
  • உள்ளாட்சி தேர்தல் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

hightoucrt

  • 5 ஆண்டுகளில் 245 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 245 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
  • ரயில் கொள்ளை: குடிசைவாசிகளிடம் விசாரணை. சென்னைக்கு வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, சேத்துப்பட்டு ரயில் நிலைய யார்டு அருகே உள்ள குடிசைப் பகுதி மக்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
  • அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 🌏5.1 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை! காஞ்சிபுரம் அருகே பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் 5 கிலோ 100 கிராம் எடையுடன் ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை பிறந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், பட்டு சேலைகளுக்கு மாதிரி வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு செவ்வாய்க்கிழமை சுகப்பிரசவத்தில் 5 கிலோ 100 கிராம் எடை கொண்ட அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழகத்திலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற பெருமையையும் இக்குழந்தை பெற்றுள்ளது.

யிpankeemonn

  • இந்தியா சிறந்த முன் உதாரணம்: பான் கீ மூன். ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பங்களிப்புகள் தூண்டுகோலாக அமைந்து எனவும், ஐ.நா., வின் செயல்பாட்டுக்கு இந்தியாவே முன்னுதாரணம் எனவும், ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.இந்திய சுதந்திர தினத்தையொட்டி அவர் அனுப்பியுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்
  • குப்பை போட்டால் அபராதம்; மத்திய அரசு புதிய திட்டம். ”துாய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், நகர் பகுதிகளில், குப்பை போட்டால் அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளோம்,”
  • நெல்லையில் தீக்குளித்து மரணம்நெல்லை தச்சநல்லூர் இனாம் தேனீர் குளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி வெள்ளத்தாய். இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். இவர்களுக்கு பி.இ.சிவில் எஞ்சினியரிங் படிக்கும் செவ்வந்தி (19) உள்பட 5 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த செவ்வந்தி தீடிரென வீட்டின் ஒரு அறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்டார். பின்னர் மண்ணெண்ணை கேனில் இருந்த ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் செவ்வந்தி உடல் கரிக்கட்டையாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாரலி ஆற்றில் ஒரு கார் தவறி விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
  • விமான நிலைய பாதுகாப்பை அதிகரிக்க முடிவுபெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால், பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க, விமான நிலைய நுழைவாயிலிலேயே பயணிகளிடம் அவ்வப்போது சோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
  • 🌏சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோயிலில் உண்டியல்கள் திருட்டு இரு தரப்பினரிடையே உண்டியல் வைப்பதில் தகராறு இருந்ததால், ஒருதரப்பினர் உண்டியலை மறைத்து வைத்துவிட்டு திருடப்பட்டதாகக் கூறலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கோயில் உண்டியல் திருட்டு தொடர்பாக இதுவரை யாரும் புகார் தரவில்லை என கொளத்தூர் போலீஸார் தெரிவித்தனர்.

solar

  • சூரிய ஆற்றல் மூலம் 400 கிராமங்களில் மின்சாரம்: சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங். சுமார் 400 கிராமங்களில் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது, மேலும் 350 கிராமங்களில் விரைவில் சூரிய ஆற்றல் மூலம் மின்னேற்றம் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் கூறியுள்ளார். தண்டேவாடா மாவட்டத்தில் லக்ஹபால் கிராமத்தில் 60 கிலோவாட் சூரிய ஆலை அமைக்கப்படும், இதன் மூலம் 7 கிராமங்கள் மின்சாரமயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
  • தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம், மேடக்கில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் வட்டம் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படவில்லை.

mettur

  • மேட்டூர் தினசரி சந்தையில் திடீரென தீ விபத்து: 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம். சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. மேட்டூர் தினசரி சந்தையில் உள்ள மீன் வறுவல் விற்பனை கடை ஒன்றில் நள்ளிரவு 12 அளவில் தீ பற்றியுள்ளது. அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கும் மளமளவென பரவிய தீ, பல அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்ததால் மக்கள் அலறியடித்து வெளியேறினர். 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஆனது. இதனால் பலருக்கு மூச்சித்திணறலும் ஏற்பட்டது.  தகவல் அறிந்து மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட இடங்களில் இருந்து 3 வாகனங்களில் இருந்து வந்த தீணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீணை அணைத்தனர்.
  • ஜூலை 8 ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கன் வானி கொல்லப்பட்டதற்காக காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துவங்கிய மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் தணியவில்லை. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்புக்கள் பல போராட்டக்காரர்களுக்கு எல்லை தாண்டி, சட்ட விரோதமாக பணம் அளித்து வருகின்றன. காஷ்மீரில் பதற்றத்தை தணியாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து காஷ்மீர் பற்றி எரிய வேண்டும் என்பதற்காக அந்த அமைப்புக்கள் பணம் கொடுத்து வருகின்றன.காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்களும், உயிர் பலிகளும் ஏற்பட வேண்டும் என்பதற்காக கடந்த 3 வாரங்களில் ரூ.24 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
  • வடசென்னை அனல் மின்நிலைய முதல் நிலை 3 வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக கடந்த 2-ம் தேதி முதல் 3-ம் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. ஆண்டு பராமரிப்பு முடிவடைந்ததை அடுத்து மீண்டும் 210 மெவா மின் உற்பத்தி தொடங்கியது.
  • மதவாதமும் மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தனது பிறந்த நாளில் ஆடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டவத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  •  கல்லூரியில் பாக்., ஆதரவு கோஷம் : 3 பேர் கைது.  கர்நாடகாவில் அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவால் நடத்தப்பட்டு வரும் கல்லூரியின் விடுதியில் ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு நண்பர்கள் 3 பேர் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். அப்போது அவர்களில் ஒருவன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷ்மிட்டுள்ளான்.சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னையில் இருவர், விடுதி அறையில் புத்தகங்கள், துணிகள் ஆகியவற்றை எரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி பாதுகாவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்த போது தாங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடவில்லை எனவும், எதிராகவே முழக்கமிட்டதாகவும் கூறி உள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி கார்த்திக் ரெட்டி கூறுகையில், சம்பவம் நடந்த போது மாணவர்கள் 3 பேரும் போதையில் இருந்துள்ளனர். இவர்களில் பாக்., ஆதரவாக முழக்கமிட்டதாக கூறப்படும் மாணவனின் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாரலி ஆற்றில் ஒரு கார் தவறி விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
  • திருவண்ணாமலை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலியப்பட்டு என்ற இடத்தில் நடந்த விபத்தில் கமலப்புத்தூரைச் சேர்ந்த பயணி ராஜா உயிரிழந்துள்ளார். நடத்துனர் குமரவேல் உள்பட 10 பயணிகள் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 2 இராணுவ வீரர்கள் உட்பட 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாயினர்.
  • மும்பை: பிரிட்டிஷ் காலத்திய பதுங்குக்குழி, மகாராஷ்டிரா ராஜ் பவனில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
  • வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட முடிவு. நாளை முதல் நீதிமன்றத்தில் வழக்கம்போல் ஆஜராவார்கள் -திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சீனிவாசன் அறிவிப்பு.

  • தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கு பதில் செல்லபாண்டியன் அவர்களும், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு பதில் வெல்லமண்டி நடராஜன் அவர்களையும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக கேஆர்பி.பிரபாகரன் நியமனம் – ஜெயலலிதா அறிவிப்பு.
  • நெல்லை நாராயண பெருமாள் எம் ராஜா மீனவரணி ஆகியோர் நீக்கம் அவருக்கு பதில்  கே ஆர்பிஐ. பிரபாகரன் நியமனம்
  • தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி ரெங்கசாமி நீக்கம்
  • திருவள்ளுர மாவட்டம் கிழக்கு வி. அலெக்சாண்டர் மேற்கு  பலராமன் நியமனம்
  • பணகுடி  பேரூராட்சியில் ஜெயிலாலீதின் நியமனம்
  • சட்டசபையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திமுக உறுப்பினர்கள் தவறுதலாகப் பேசியிருக்கலாம் அவர்களுடைய இந்த நடவடிக்கைகளால் நான் வெட்கப்படுகிறேன்  வேதனைப்படுகிறேன் இன்னும் சொல்லப்போனால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவும் தயாராக உள்ளேன் – முக ஸ்டாலின்.
  • இந்தியா முழுவதும் அனைத்து டோல்கேட்டிலும் பத்திரிக்கையார்களுக்கு இனி கட்டணம் கிடையாது்  அடையாள அட்டை கண்டிப்பாக  இருந்தால் அனுமதிக்கபடும் -மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவு.
  • மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ராஜரத்தினத்தை நியமித்தது தமிழக அரசு .
  • உத்தரப் பிரதேசத்தில் கனமழை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
  • வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் அலகு 3வது பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்.
  • மதுரை விளக்குத்தூண் அருகே போஸ்டர் அப்புறப்படுத்தக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்.
  • முரசொலி மாறனின் 83-வது பிறந்தநாள் : மலர் தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் கருணாநிதி.
  • விழுப்புரம் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சிங்காரம் மாற்றம். புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக சிவகுரு என்பவரை நியமித்து தமிழக அரR/
  • வாட்ஸ்அப்பில் குரூப் துவக்கி வசூல் , புறக்கணிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு புத்துயிர் தந்தது இளைஞர் கூட்டம்: சிவகங்கை அருகே கன்னிமார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இப்பள்ளியில், போதிய வசதிகள் இல்லாததால், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதனால் பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இப்பள்ளியில் படித்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியை நாடினர். அவர்களை ஒருங்கிணைக்க, வாட்ஸ்அப் குரூப் 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் பள்ளியின் தற்போதைய நிலை, தேவைகள் குறித்து பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த இளைஞர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடையாக வழங்கினர். உடன் வேலை செய்யும் பிற மாநிலம், மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உதவி செய்தனர்.  இவ்வாறு ரூ.7 லட்சம் திரட்டப்பட்டது. இந்த நிதியில், பள்ளிக்கட்டிடத்தை முழுவதுமாக சீரமைத்தனர். மாணவர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, வகுப்பறையில் டேபிள், சேர், பெரிய அளவிலான போர்டு, சுவர்களுக்கு பெயின்ட் என `ஸ்மார்ட் ஸ்கூல்” வடிவில் மாற்றினர். புதிதாக 2 ஆசிரியைகளை அவர்களே ஊதியம் வழங்கி நியமித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு 12 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியில், தற்போது 60 பேர் படிக்கின்றனர். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அதை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் துபாயில் வேலைபார்க்கும் முன்னாள் மாணவர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.