சென்னை

இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார்.

திமுக முன்னாள் நிர்வாகியும் தலைமறைவாக இருந்தவருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார்.

மேலும் இதற்குத் தார்மீக பொறுப்பேற்று மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.

இன்று போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகச் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து புகார் மனுவை அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]