சென்னை

ன்று முதல் இளம்கலை பொறியிய படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன. இணையவழியில் இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து அதில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். கடந்த 10 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளிகி முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்களில் 836 இடங்களில் மட்டுமே நிரம்பியுள்ளன. 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

இன்று பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு முதல் தொடங்குகிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 26,654 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 31-க்குள் தேர்வு செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணிக்குள் இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். தொடர்ந்து, ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்படுள்ளது.