சென்னை
தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 50,209 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,72,63,648 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் கேரளாவில் இருந்து வந்துள்ளார். இதுவரை 8,52,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 12,502 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 473 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,35,506 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.