சென்னை

ன்று காலை பொதுமக்களிடம் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக மனுக்களைப் பெற உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி
பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் தொகுதியின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது