சேலம்

ன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கோப்பு படம்

நேற்று மாலை சேலம் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்  இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

முதல்வர் இன்று காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். எனவே மேட்டூர் அணை பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவுகிறார்.

பிறகு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வந்து காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார்.

பிறகு சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.