சென்னை
தமிழகத்தில் இன்று திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அவ்வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டன.
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
தற்போதைய தளர்வுகள் அறிவிப்பில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன.
மொத்த கொள்ளளவில் 50% மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
புதிய படம் வெளியாகாததால் ஏற்கனவே வெளியான படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel