சென்னை

ன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்துப் பேசி உள்ளார்.

கடந்த 2021 ஆம் வருடம் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதே நாள் தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

அவர். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிக் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.

வெ இறையன்பு புதிய தலைமைச் செயலாளராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனாவை நியமித்து உத்தரவிட்டார். கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.

இன்று புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். ஆளுநரின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக அவரை தலைமைச் செயலாளர் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.