சென்னை

ன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.   பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை அடைந்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் கடும் துயர் அடைந்துள்ளனர்.

விடாது கொட்டித் தீர்க்கும் மழையால் நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி நிற்கிறது.   வாகன ஓட்டிகள் இதனால் கடும் அவதி அடைகின்றனர்.    பல சுரங்க பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலைப் போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் நலனுக்காகச் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இன்று இரவு 11 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.