டில்லி
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்திய ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரத் துடிக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒரே குடையின் கீழ் இணைந்து, குறைந்தபட்சம் 400 தொகுதிகளிலாவது பா.ஜ.க.வை எதிர்த்து பொது வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியதை தொடர்ந்து, தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டனர்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, விமான போக்குவரத்து, நீர்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.