சென்னை:

காவிரி ஆணையம் வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் உள்ள  கர்நாடக வங்கிகள், ஹோட்டல்கள், கர்நாடக அரசு தனியார்  நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு   பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை  தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி அமித்தவராயின் பதவிக்காலம் வரும் மார்ச் 1ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில்  இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று  தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில்,  இருமாநிலத்திலும் எந்த அசம்பாவிதங்கள் நடக்காத இருக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு செல்ல வேண்டிய தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இரு மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.