கட்கர்லைன், பஞ்சாப்
இன்று ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த கட்சியின் பகவந்த் மான் முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி இன்று பக்வந்த் மான் பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இன்று இவர் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பூர்விக ஊரான ஷாகித் பகத்சிங் ந்கர் மாவட்டத்தில் உள்ள கட்கர்லைனில் நடைபெற உள்ள விழாவில் பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பக்வந்த் மான் மட்டுமே பதவி ஏற்கிறார். இன்று அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
கட்கர்லைன் பகுதியில் இந்த பதவி ஏற்பு விழாவுக்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செயுயப்ப்பட்டுள்ளன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விழா நடைபெற உள்ளது. வாகன நிறுத்த வசதிக்காகத் தனியாக 50 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு 3 லட்சம் பேர் வரலாம் என எதிர்ப்பர்ப்பு உள்ளது.
இந்த விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். விழாவுக்காக இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான பாதுகாப்புப் பணியில் 10000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.