க்னோ

ன்று அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த 1192 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.   இதில் ராமஜென்ம பூமி கரசேவையில் முன்னணியில் இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேருக்கு இதில் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து 351 பேரிடம் விசாரணை நடந்தது.  இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட்வரக்ளுக்கு எதிராக 600 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில் 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர் உயிர் இழந்து விட்டனர்.  உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.   அதன் பிறகு மேலும் ஒரு மதம் அவகாசம் அளிக்கப்பட்டு செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பு அளிக்க உத்தரவு இடப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி அன்று முரளி மனோகர் ஜோஷி மற்றும் ஜூலை 24 ஆம் தேதி அத்வானி ஆகியோர் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தனர்.   இதைப் போல் கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர்.  தங்களைத் தேவையின்றி இவ்வழக்கில் சிக்க வைத்திருப்பதாகவும் அரசியல் நெருக்கடியால் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி என்பதால் இன்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.