சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 2,762 பேரும் கோவையில் 3,937 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,09,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 22,775 பேர் உயிர் இழந்து 16,74,539 பேர் குணம் அடைந்து தற்போது 3,12,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,762 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,96,706 பேர் பாதிக்கப்பட்டு 6,831 பேர் உயிர் இழந்து 4,48,377 பேர் குணம் அடைந்து தற்போது 41,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,937 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,59,762 பேர் பாதிக்கப்பட்டு 1,168 பேர் உயிர் இழந்து 1,20,258 பேர் குணம் அடைந்து தற்போது 38,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,36,664 பேர் பாதிக்கப்பட்டு 1,699 பேர் உயிர் இழந்து 1,21,170 பேர் குணம் அடைந்து தற்போது 13,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected, district wise, கொரோனா, தமிழகம், பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி, 28/05/2021