ஊட்டி
கனமழையை முன்னிட்டு ஊட்டியில் இன்று அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதையொட்டு=இ கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும். நாளையும், அதி கன மழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் இன்று அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாகவும், உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார் .
Patrikai.com official YouTube Channel