டில்லி

இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆய்வு ந்டத்த உள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் அத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது . ஆயினும் அக்கட்சியால் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டமுடியவில்லை.

பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் கூறினார். டில்லியிலும் இதே நிலை இருந்தாலும் காங்கிரஸ், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிவித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியான கோபால்ராய் செய்தியாளர்களிடம் கட்சியின் அரசியல் விவகார குழுக் கூட்டம் இன்று  நடைபெற உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.