மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 9,974 மற்றும் கேரளா மாநிலத்தில் 10,905 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 9,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 60,36,821 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 405 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,21,286 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 8,562 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 57,90,113 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,22,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 10,905 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,88,895 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 62 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,880 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 12,351 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,75,822 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,01,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.