மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 9,927. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 22,38,398 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 56 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 52,556 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 12,182 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,89,294 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 95,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 10,81,056 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 4,329 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 4,386 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 10,20,671 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 37,146 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.