இன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு

Must read

சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 1,11,054ஆக உயர்ந்துள்ளது. இன்று  சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1108 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,350 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

More articles

Latest article