கொல்கத்தா

ன்று காலை 7 மணி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 43 தொகுதிகளுக்கு 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.   இம்மாநிலத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவுகள் நடந்து வருகின்றன.  இதில் ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 3 மற்றும் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது கடும் வன்முறை வெடித்தது.  இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மரணம் அடைந்தனர்.  தற்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 1,071 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 6 ஆம் கட்ட வாக்கெடுப்பில் 4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் 306 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   இம்மாநிலத்தில் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி கடுமையாக உள்ளது.

கொரோனா பரவலால் ஒரே கட்டமாக வாக்கெடுப்பை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.