மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 6,857 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 62,82,914 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 288 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,32,147 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 6,105 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 60,64,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 82,543 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 22,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 33,27,301 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 131 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 16,458 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 17,761 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,60,804 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,49,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.