சென்னை
தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,56,917 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 64,082 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,77,03,207 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். இதுவரை 8,56,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 12,530 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 532 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,40,180 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.