சென்னை

மிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,27,614 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

இன்று தமிழகத்தில் 60,287 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,46,38,489 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 4 பேரும், வெளிநாட்டில் இருந்து இருவரும்  வந்துள்ளனர்.   இதுவரை  8,27,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,236 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 827 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,08,571 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.