சென்னை

சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 200 க்கு குறைந்து அதாவது 194 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,27,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,28,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,053 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 219 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,22,039 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,077 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.