சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில், இன்று 1,286 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,870 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இன்று மட்டும் தொற்று சிகிச்சை பலனின்றி 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 44,98,706-ஐ கடந்துள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில், சென்னையில் 1286 பேரும், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 5 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் உள்பட 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்கள் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை 4,03,242 பேர்.
இதுவரை 44,98,706 பேருக்குஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 76,345 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 3,643 பேர் ஆண்கள், 2,338 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 2,43,589 ஆண்கள், 1 ,59,624 பெண்கள், 29 பேர் திருநங்கைகள்.