சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 5,146  நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,459  ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், இன்று மட்டும் 119 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பில் அதிக பட்சமாக சென்னையில் 989 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இதனால் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,886 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/ வெளிநாடுகளில் இருந்து வந்த 867 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 726 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4293 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,67,334-ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,846 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 73 தனியார் ஆய்வகங்கள் என 134 ஆய்வகங்கள் உள்ளன.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,499.

இதுவரை  மொத்தம் எடுக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 34,99,300.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை மாதிரி எண்ணிக்கை 67,275.

இதுவரை  மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,20,355.

இதுவரை தொற்று பாதிக்கப்பட்டுள்ள வர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,93,226 பேர்/ பெண்கள் 1,27,100 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,549 பேர். பெண்கள் 2,286 பேர்.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 38 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,397 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,384 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 112 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்”.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.