சென்னை

ன்று தமிழகத்தில் 5447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,35,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 77,25,962 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதில் 9 பேர் வெளி மாநிலங்களில்  இருந்து வந்துள்ளனர்.

இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9984 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,524 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,80,736 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 45,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.