டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 4,584. மற்றும் மகாராஷ்டிராவில் 5,427 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 20,81,520 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,669 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2543 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,88,804 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,21,433 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,193 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,56,935 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.