பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 478 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,87,313 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,054 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 334 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,40,673 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,557 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,65,235 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 14,365 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 414 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,46,127 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.