மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 4,666 மற்றும் கேரளா மாநிலத்தில் 29,836 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 64,56,939 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 131 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,37,157 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,510 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 62,63,416 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 40,07,408 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 75 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,541 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 22,088 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,73,754 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,12,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.