டில்லி

டில்லியில் இன்று 4473 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,30,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 2,30,269 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,839 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,94,516 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 30,914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.