மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,196 மற்றும் கேரளா மாநிலத்தில் 30,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,64,876 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,37,313 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,688 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,72,800 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,238 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 30,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 40,57,233 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,667 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,17,004 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,18,921 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.