பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,23,444 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34425 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,768 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,78,473 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,10,523 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,67,017 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 12,490 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 6,464 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,04,844 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,683 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.