டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,59,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை 4,198 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 4,353 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,06,499 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 49,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரள மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,51,251 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,331 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 350 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,33,097 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.