மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,992, கர்நாடகாவில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,33,266 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 51,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 7,030 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,43,335 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 37,516 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடாகாவில் இன்று 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 9,40,596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,225 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 433 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,22,437 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 5,915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.