பெங்களூர்
இன்று கர்நாடகாவில் 24,214 டில்லியில் 1,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 24,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 25,23,998 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 476 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,405 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 31,459 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,94,369 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,02,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.
டில்லியில் இன்று 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 14,22,549 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 117 பேர் உயிர் இழந்து இதுவரை 23,812 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 3,725 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,82,359 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.