இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி

Must read

விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 49,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,90,104 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 328 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,212 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,943 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,55,797 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,17,075 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 21,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,28,186 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 72 பேர் உயிர் இழந்து இதுவரை 8,446 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 10,141 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,37,471 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,82,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article