சென்னை: தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், மக்கள் முக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கும்படி தமிழகஅரசு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,112 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 77,3056 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 8லட்சத்து 63ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,296 பேர் ஆண்கள், 816பேர் பெண்கள். தமிழகத்தில் 208 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 13 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 440 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,347 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,22,686 ஆக அதிகரித்துள்ளது.”
தமிழகத்தில் உள்ள 208 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-142) மூலமாக, இன்று மட்டும் 77,356 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 05லட்சத்து 85 ஆயிரத்து 460 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,296 பேர் ஆண்கள், 816 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,54,454 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,98,034 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 33 ஆகவும் உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.