இன்று உத்தரப்பிரதேசத்தில் 20,301 பேர், டில்லியில் 12,841 பேருக்கு கொரோனா உறுதி

Must read

டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20,301 பேர், மற்றும் டில்லியில் 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 20,301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,45,068 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 298 பேர் மரணம் அடைந்து இதுவரை 16,040 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 38,956 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,12,710 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 2,16,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 12,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,48,699 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 347 பேர் உயிர் இழந்து இதுவரை 20,010 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 13,583 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,44,880 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 83,809 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article