சென்னை
இன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். மே 6-ம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 94.56% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற் 5.44% பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.b