சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1939 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 512 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும 17,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 2572 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுப்பட்டனர். இதன் காரணமாக இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,25,258 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 14 பேர் மட்டுமே உயரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 73,486 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1,09,37,407 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல, இன்று மட்டும் 72,629 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை 1,06,58,089 ஆக உயர்ந்துள்ளது.