திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 18,853. மற்றும் ஆந்திராவில் 11,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 18,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,84,854 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 153 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,376 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,569 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,90,437 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,84,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 11,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,28,757 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 81 பேர் உயிர் இழந்து இதுவரை 11,213 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 16,223 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,78,452 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,38,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.