சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 177 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,755 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,44,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,402 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 205 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,34,166 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,16,381 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 186 உடன் முதல் இடத்தில் உள்ளது.