பெங்களூரு
கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் இன்று 1509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 8,74,555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 11,678 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,645 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,38,150 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 24,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.