மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 15.077 மற்றும் கர்நாடகாவில் 16,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 15,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 57,46,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 500 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 95,344 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 33,000 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 53,95,370 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,53,367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 16,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 26,04,431 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 411 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,090 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 44,473 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,61,590 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,13,730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.