திருவாரூர்:
திருவாரூ மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (நேற்று மாலை நிலவரப்படி) 50,193 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் சென்னை உள்பட பல மாவட்ட்ங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக அதிகரித்து இருந்தது. இதுவரை 74 பேர் நோய் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது 89 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்து உள்ளது.
[youtube-feed feed=1]