சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 134 பேர் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,38,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,31,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை 4,109 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் சென்னையை தவிர வேறெங்கும் கொரோனா மரணம் இல்லை.

இன்று 99 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,25,729 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,586  பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.