விஜயவாடா

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 32,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,60,365 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,171 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,413 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,07,680 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,47,182 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 11,434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,54,875 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 64 பேர் உயிர் இழந்து இதுவரை 7,800 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 7,065 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,47,629 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 99,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.