சென்னை
இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. கடந்த மாதம் இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் பல லட்சம் பேர் தங்கள் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக் கருதி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறூ கூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த மறுகூட்டல் முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். அத்துடன் மறு கூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் உடனடியாக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
[youtube-feed feed=1]