சென்னை

மிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,10,080 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 70,534 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,33,58,824 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில்  வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 4 பேர் ஆவார்கள்.

இதுவரை  8,10,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,024 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,131 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,88,742 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.